காதலி கவிதை

 

ஒற்றை முத்தம்
இரட்டைத் தழுவல்
ஒற்றைத் தலையணையில்
இரட்டைத் தலைகள்

உன் கூந்தல் 
நறுமணத்தால்
மனம் மயங்கி
உருகி, கரைந்து

ஒவ்வொரு இரவும்
உன்னருகில் நான்
என்னருகில் நீ
கட்டியணைத்து

உன் வெப்பம்
உன் குளுமை
உன் வியர்வை
மூன்றும் சுவைத்து

இரவு முழுவதும்
பகலென வெளிச்சம்
பகல் முழுவதும்
இரவெனக் கனவு

மற்றவை 
நேரில் சொல்கிறேன்

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top