காலில் உண்டாகும் புண்

 

காலில் உண்டாகும் புண். காலில் புண் உண்டானால், அந்தப் புண்ணை மருந்துகளைப் பயன்படுத்தி உடனடியாக ஆற்றிவிட வேண்டும். புண்களை ஆற்ற முடியாவிட்டால் புண் இருக்கும் பகுதியோடு காலை வெட்டிவிட வேண்டும். இல்லை என்றால் அதில் கிருமிகள் உருவாகும். அந்த புண் பரவத்தொடங்கும். புண் மேலும் பெரிதாகும், வலியும் வேதனையும் அதிகரிக்கும். உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். இதுதான் கால்களில் புண்கள் உண்டாகும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு காலை துண்டித்தால், வெட்டிய காலின் புண்ணை ஆற்ற முடிகிறது. அவ்வாறு இருக்கையில் சுயமாகத் தோன்றிய புண்ணை ஏன் ஆற்ற (குணப்படுத்த) முடிவதில்லை என்பதை ஆங்கில மருத்துவர்கள் சிந்திக்க வேண்டும். நீங்களும் சிந்துப் பாருங்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் உருவாகும் புண்கள், சர்க்கரை நோயினால் உண்டாகும் பாதிப்போ, பக்க விளைவோ அல்ல. மாறாக அவர்கள் உட்கொண்ட ஆங்கில இரசாயன மருந்துகளின் பக்கவிளைவு. அவர்களின் உடலில் சேர்ந்துள்ள இரசாயன மருந்துகளை வெளியேற்றவே உடல் சுயமாக காலில் துளையிட்டு கழிவுகளை வெளியேற்றுகிறது. இதைப் புரிந்துக் கொண்டு உடலுடன் ஒத்துழைக்காமல், புண்களை ஆற்ற வேண்டும் அல்லது காலை துண்டிக்க வேண்டும் என்று கிளம்பும் போது தான் அந்த நோயாளியின் நிலை மேலும் மோசமடைகிறது. உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top