ஆன்மீகம் என்றால் என்ன?


ஆன்மீகம் என்றால் என்ன? மனித வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குப் பிறகு; தான் தேடிய எதுவுமே உண்மையில்லை, தன்னிடம் இருக்கும் அனைத்துமே அழியக் கூடியவை என்று மனிதர்கள் உணர்ந்து கொள்வார்கள். இது இயல்பாகவே மனித வாழ்க்கையில் உண்டாகும் மாற்றம், ஆன்மாவின் முதிர்ச்சி.

நான் ஏன் இந்த பூமிக்கு வந்தேன்? ஏன் மனிதனாகப் பிறந்தேன்? பிறப்புக்கு முன்பாக எங்கு இருந்தேன்? ஏன் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன்? என் வாழ்க்கையின் நோக்கம் என்ன? எதனால் மரணிக்கிறேன்? மரணத்துக்குப் பிறகு எங்கே செல்கிறேன்? மரணத்திற்குப் பின்பாக என்ன நடக்கும்? இவ்வாறான கேள்விகள் உள்ளுக்குள் உருவாகும்.

இவ்வாறான கேள்விகளுக்கு விடை தெரியாமல், அறியாமல் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களை நெறிப்படுத்த உருவானதே ஆன்மீகம். மனித அறிவுக்கு எட்டாத விசயங்களுக்கும், மனிதனுக்குள் உருவாகும் சூட்சமத்தைப் பற்றிய கேள்விகளுக்கும் விடைகளை கண்டறிய வழி சொல்வதுதான் ஆன்மீகம்.

மனித உடலையும் மனதையும் தாண்டிய அறிவும், தேடுதலும் தான் ஆன்மீகம்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top