தவறான மருத்துவம்

 

தவறான மருத்துவம். இன்று புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான மருத்துவமுறைகள், அதன் மருத்துவர்களை, இந்த நோய்க்கு இந்த மருந்து, அந்த நோய்க்கு அந்த மருந்து என்ற வகையில்தான் பயிற்றுவிக்கின்றன. பல மருத்துவர்கள் மருந்துகளைப் பற்றி மட்டும் மனப்பாடம் செய்துவிட்டு மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதனால் தான் அவர்களால் எந்த நோயையும் முழுமையாக குணப்படுத்த முடிவதில்லை.

ஒரு உண்மையைத் தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள், பல மருத்துவர்கள் நோய்களைக் குணப்படுத்துவதில்லை. நோயை உணராமல் மறைக்கும், நோயை உடலுக்குள்ளேயே அடக்கும், மற்றும் ஒரு நோயை வேறு நோயாக மாற்றும் வேலைகளை மட்டுமே செய்கிறார்கள். ஒரு நோய்க்காக மருத்துவம் செய்யத் தொடங்கும் போது, பல புதிய நோய்கள் உருவாவது இதனால்தான். பழைய நோயினால் தான் புதிய நோய்கள் உருவாகின என்று மருத்துவர்கள் கூறுவார்கள், அது முழுமையான உண்மையல்ல.


மருத்துவம் செய்யாமல் ஒரு நோயிலிருந்து, மற்றொரு நோய் தோன்றினால் அவர்கள் சொல்வது சரி. ஆனால் மருத்துவம் செய்யத் தொடங்கிய பிறகு புதிய நோய்கள் உருவாகத் தொடங்கினால் அதற்கு அந்த மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் தான் காரணமாக இருக்க முடியும். ஒருவேளை மருந்துகளினால் புதிய நோய்கள் தோன்றவில்லை என்று மருத்துவர்கள் கூறினால்; அவர்கள் கொடுக்கும் மருந்து பொய்யானது, அவை நோய்களைத் தடுப்பதில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top