சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்? - 3

 

சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்? மருந்து மாத்திரைகள் மூலமாக உடலில் கலக்கும் இரசாயனங்கள் எந்த உறுப்பில் தேங்குகிறதோ அந்த உறுப்பை பாதித்து, சீர்கெடுத்து, அழுகிப் போகவும் காரணமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு குறிப்பாக கால்களில் புண் உண்டாவதற்கும், கால் அழுகுவதற்கும் காரணம் புவியீர்ப்பு சக்தி.

இன்றைய மனிதர்கள் பெரும்பாலான நேரங்களில் கால்களைத் தொங்க வைத்துக்கொண்டு நாற்காலியில் அமர்கிறார்கள். கால்களை மடக்கி அமர்வதும், தரையில் சம்மணமிட்டு அமர்வதும் அரிதாகி விட்டது. சாப்பிடும் போதும், படம் பார்க்கும் போதும், ஓய்வெடுக்கும் போதும், அலுவலக வேலைகளைச் செய்யும் போதும், எல்லா நேரத்திலும் பெரும்பாலும் கால்களை கீழே தொங்கவிட்டு அமர்கிறார்கள்.

உடல் முழுவதும் பயணிக்கும் இரத்தம் கால்களை அடையும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக மீண்டும் மேலே சுழன்றுவர சிரமப்படுகிறது. இரத்தம் மூலமாக கால்களுக்கு சென்ற இரசாயனங்கள், மீண்டும் மேலே ஏறாமல் கால்களிலேயே தேங்குகின்றன. வெகு நாட்கள் கால்களில் சேர்ந்த இரசாயனங்கள், அதிலேயே தேங்கி கால்களில் வலி உருவாகவும், கால்கள் வீங்கவும், கால் நரம்புகள் இழுத்துக் கொள்ளவும், கால்கள் தளர்ந்து போகவும், கால்களில் புண்கள் உருவாகவும் ஒரு சிலருக்கு கால் விரல்கள் அழுகிப்போகவும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த தொந்தரவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி எந்த இரசாயன மருந்து மாத்திரைகள் உட்கொள்பவருக்கும் உருவாகலாம்.


தொடரும்…

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top