சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்? - 2

 

சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண் உண்டாவது ஏன்? உண்மையைச் சொல்வதானால், விரல்கள் அழுகுவதற்கும் கால்கள் வெட்டப்படுவதற்கும் சர்க்கரை நோய் காரணம் அல்ல. கால்கள் எதனால் அழுகுகின்றன என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்றால் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும்.

மனிதர்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு பொருளும், வயிற்றில் ஜீரணமாகி இரத்தத்தில் கலந்து; இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பயணப்படுகிறது. ஒருவர் உட்கொள்வது நல்ல பொருளாக இருந்தாலும் அல்லது கெட்ட பொருளாக இருந்தாலும்; அது நிச்சயமாக இரத்தத்தில் கலந்துவிடும். இரத்தம் மூலமாக அந்தப் பொருள் உடலின் ஒவ்வொரு செல்லையும் சென்றடையும்.

சர்க்கரை நோயாளிகள் அதிகமான மருந்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். இரசாயனங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட அந்த மாத்திரைகளை உடலால் முழுமையாக ஜீரணிக்க முடியாது. உடலால் ஜீரணிக்க மற்றும் வெளியேற்ற முடியாத இரசாயனங்கள் இரத்தத்தில் கலந்து உடலில் சுற்றிக்கொண்டு இருக்கும்.


இரத்தத்தில் பயணம் செய்யும் அந்த இரசாயனங்கள் உடலில் எந்த பாகத்தில் தேங்குகிறதோ; அந்த பாகத்தைக் கெடுத்து அந்த இடம் அழுகவும் புண் உருவாகவும் காரணமாக இருக்கிறது.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் இரத்தம் உடலில் பயணம் செய்கிறது. இரத்தம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் சத்துக்களை எடுத்துச் செல்லும், அந்த உறுப்புகளில் உருவாகும் கழிவுகளை உடல் இரத்தம் மூலமாகவே மீண்டும் வெளியேற்றும். இவ்வாறு உடல் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கும் இரத்தத்தில் கலக்கும் இரசாயனங்கள் எந்த உறுப்பில் வேண்டுமானாலும் சேரலாம், கலக்கலாம், தேங்கலாம்.

தொடரும்…

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top