மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மனம்

 

மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மனம். மனிதர்கள் இந்த பூமியில் வாழ்வதற்கு உணவு, உடை, மருத்துவம், மற்றும் பாதுகாப்பு, மட்டுமே அத்தியாவசிய தேவைகளாகும். உடல் சார்ந்த இந்த நான்கு தேவைகளும் விலங்குகள் கூட இயல்பாகப் பூர்த்தி செய்து கொள்ளக் கூடியவை. விலங்குகள் உணவுக்காகவும் மருத்துவத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் சிரமப்படுவதில்லை, காரணம் அவற்றிற்கு விருப்பு வெறுப்பு என்ற உணர்வுகள் இருப்பதில்லை. 

மனிதர்கள் குழந்தைகளாக இருந்த காலகட்டங்களில் விருப்பு-வெறுப்பு என்ற பதிவுகளும், உணர்வுகளும் இல்லாமல் இருப்பதனால், குழந்தைப் பருவத்தில் இருப்பதைக் கொண்டும், கிடைப்பதை உண்டும், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தார்கள். மனிதர்களுக்கு மனம் எனும் கருவி வளரத் தொடங்கிய பிறகு தங்களின் வாழ்க்கை அனுபவங்களை இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு, என்று பல பிரிவுகளாகப் பிரித்து மனதினுள் பதிவு செய்யத் தொடங்குகிறார்கள்.

உடல் வளர்ச்சி அடைந்ததும், இளமைப் பருவம் முதல் முதுமை வரையில் தன் மனதில் பதிந்திருக்கும் பதிவுகளைக் கொண்டு; உடலின் தேவைகளை பகுப்பாய்வு செய்யவும், அவற்றைப் பூர்த்தி செய்து கொள்ளவும் மல்கிறார்கள். தேவைகள் உடலுக்கானதாக இருந்தாலும் அவற்றை முடிவு செய்வது மனமாக இருப்பதனால் விருப்பு வெறுப்பு உண்டாகிறது. உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையாக இல்லாமல், மனதைத் திருப்தி செய்யக்கூடிய செயலாக மாற்றமடைகிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top