மலங்களை உடலில் சேரவிடாதீர்கள் - 2

 

மலங்களை உடலில் சேரவிடாதீர்கள். நான் சந்தித்த பெரும்பாலானவர்கள் நான் தினமும் மலம் கழிக்கிறேன் எனக்கு மலச்சிக்கல் கிடையாது என்பார்கள். அதற்கு காரணம் மலம் கழிப்பது என்றாலே உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை முழுமையாக வெளியேற்றுவது என்பது புரியாதது தான். காலையில் கழிவறையில் அமர்ந்ததும் ஏதாவது வெளியேறினால் போதும் என்று எண்ணுபவர்கள் தான் பெரும்பான்மை. 

மலக்கழிவுகள் பல வகையாக உள்ளன, புதிய மலம், இருகிய மலம், மற்றும் நாள்பட்டவை. மலம் முழுமையாக வெளியேற வேண்டுமென்றால் கழிவறையில் பொறுமையாக அமர்ந்திருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது முக்கக்கூடாது. புதிய மலங்கள் விரைவாக வெளியேறிவிடும். அதோடு முடிந்துவிட்டது என்று எண்ணக்கூடாது, நாள்பட்ட பழைய மலங்கள் உங்கள் குடலுக்குள் தேங்கியிருக்க வாய்ப்புகள் உள்ளது.


நாள்பட்ட மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இறுகிய மலங்களை வெளியேற்றிவிட்டால் மற்ற மலங்கள் சுலபமாக வெளியேறிவிடும், மலச்சிக்கல் குணமாகும். பழைய மலங்கள் இறுக்கி போய் இருப்பதால் தாமதமாகத்தான் மலம் வெளியேறும். அவை வெளியேற 15 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் கூட ஆகலாம், பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

நாள்பட்ட மலத்தை வெளியேற்ற வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி, கழிவறையில் அவசரப்படாமல், முக்காமல், அமைதியாக அமர்ந்து மலம் கழிக்க வேண்டும். அரை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை அமைதியாக அமர்ந்திருங்கள். பழைய இறுகிய மலங்கள் வெளியேற தொடங்கிவிடும். பழைய மலங்கள் இறுக்கமாகவும், கறுப்பாகவும், நாற்றம் மிகுதியாகவும் இருக்கும், அவை வெளியேற தொடங்கிவிட்டால் குடலும் உடலும் சுத்தமாக தொடங்கிவிட்டது என்பது பொருளாகும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top