ஆன்டிபயாட்டிக் மருந்தும் விசித்திர மனிதரும் - 3

 

பயோடிக் (Biotic) என்றால் உயிர் சக்தி, நுண்ணுயிர் அல்லது உயிர் என்று பொருள் கொள்ளலாம். ஆன்டிபயாடிக் (Antibiotic) என்றால் உயிராற்றலுக்கு எதிரானது அல்லது உயிர்களுக்கு எதிரானது என்று பொருள் கொள்ளலாம். மனித உடலின் இயக்கத்திற்கும், உடலின் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய பல்லாயிரக் கணக்கான நுண்ணுயிர் வகைகள் உடலில் இயங்குகின்றன, அவற்றையும் சேர்த்துத்தானே இந்த மருந்துகள் (விஷம்) கொல்லும்?

உடலில் நோய்களை அல்லது தொந்தரவுகளை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் என்று நம்பி பரிந்துரைக்கப்படும் இந்த ஆண்டிபயாடிக் ஊசி மற்றும் மாத்திரைகள் உடலில் உள்ள கெட்ட மற்றும் நல்ல நுண்ணுயிரிகளையும் சேர்த்தே அழித்து விடுகின்றன. இதனால் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் நல்ல நுண்ணுயிர்களும் அழிந்து சில வேளைகளில் கொடிய, நாள்பட்ட மற்றும் தீர்க்க முடியாத நோய்களும் உருவாக காரணமாகிறது.

உடலின் உயிர் சக்தியையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், கட்டுப்படுத்துவதும், சிதைப்பதும், சிறந்த மருத்துவமுறை என்று நம்பி அந்த மருத்துவத்தை மேற்கொள்ளும் மனிதர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விசயங்கள். 

உடலின் உயிர் சக்தியை அதிகரிப்பது வைத்தியமா அல்லது உடலின் உயிர் சக்தியைச் சிதைப்பது வைத்தியமா? நோயெதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துவது வைத்தியமா அல்லது நோய் எதிர்ப்பு சக்தியைக் கெடுப்பதும் பலவீன படுத்துவதும் மருத்துவமா? சிந்தித்துப் பாருங்கள், உங்களுக்கு இந்த மருந்துகளைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களிடம் கேளுங்கள்.


இந்த மருந்துகள் உடலின் தீய விசயங்களை மட்டுமே அழிக்கும் என்று மருத்துவர்கள் கூறினால். நல்ல நுண்ணுயிர்கள் மற்றும் தீய நுண்ணுயிர்களைப் பிரித்துப் பார்க்கும் அறிவு அந்த மருந்துகளுக்கு உண்டா? அவை எவ்வாறு பயனுள்ள மற்றும் பயனற்ற நுண்ணுயிர்களைப் பிரித்துப் பார்க்கும் என்றும் கேளுங்கள்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top