ஆன்டிபயாட்டிக் மருந்தும் விசித்திர மனிதரும் - 1
ஆன்டிபயாட்டிக்
0
Comments
ஆன்டிபயாட்டிக் மருந்தும் விசித்திர மனிதரும். மலேசியாவில், பேராக் மாநிலத்தில், ஈப்போ மாநகரில், மேலே படத்தில் காணப்படும் இந்த நபரை எதேச்சையாக சந்தித்தேன். திரைப்படம் பார்க்க திரையரங்கு ஒன்றுக்குச் சென்றிருந்த போது அவர் அந்த திரையரங்கின் வாசலில் சிறிய அளவில் நொறுக்குத் தீனிகளை விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இரவு நேரத்தில் சாலையோரத்தில் தலை இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு உருவத்தைக் கண்டு சிலர் அஞ்சியதாக ஒரு மலாய் நாளிதழில் இவரைப்பற்றிய ஒரு கட்டுரை புகைப்படத்துடன் வெளிவந்தது, அதை வாசித்திருக்கிறேன். அதன் மூலம் அறிமுகமானதால் இவருக்கு என்ன நடந்தது? எதனால் இவரின் தலை கழுத்தோடு நிற்கவில்லை? எதனால் இவரின் தலை தொங்குகிறது? என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது.
இவற்றை அவரிடம் விசாரித்த போது அவர் கூறியவையாவது; அவர் இளைஞனாக இருந்த போது நோய்கள் எதுவும் தன்னை அண்டிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில மாதங்களுக்கு ஒருமுறை ஆங்கில மருத்துவரை நாடி ஆண்டிபயாடிக் ஊசியை தனது இடுப்பு வழியாக உடலுக்குள் செலுத்திக் கொள்வாராம்.
சில வருடங்கள் இதைப் போன்று தொடர்ந்து ஆண்டிபயாடிக் ஊசிகளைப் செலுத்திக் கொண்டதும், இவரின் உடல் தளர்ச்சி அடைய தொடங்கியதாம். அந்த குறிப்பிட்ட ஆங்கில மருத்துவரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது, தனக்கு காரணம் தெரியவில்லை ஆனால் இனிமேல் இந்த ஊசியை செலுத்திக்கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டாராம். சில மாதங்களில் அவரின் முதுகெலும்பு தளர்வடைந்து தலை கழுத்தில் நிற்காமல் தொங்கத் தொடங்கியதாம்.
அவருக்கு நன்மை செய்யும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நம்பி அவர் உடலுக்குள் செலுத்திக் கொண்ட ஆண்டிபயாடிக் ஊசி அவரின் உடலைச் சிதைத்து, உடலின் ஆரோக்கியத்தைச் சிதைத்து, அவரின் வாழ்க்கையையும் சிதைத்துவிட்டது.
தொடரும்…

Post a Comment