வலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும் - 2
உபாதைகள்
0
Comments
வலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும். இப்போது முந்தைய கட்டுரையில் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உருவாகும் வலிகளுக்கான காரணங்களை தெரிந்துக்கொள்வோம்.
வலிகள் எதனால் உருவாகின்றன? ஒரு மனிதனுக்கு வலிகள் உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அவற்றில் சில.
1. நோய் குணமாகும் போது வலி உருவாகலாம்.
2. உடலின் இயக்கத்திறன் அதிகரிக்கும் போது வலி உருவாகலாம்.
3. உடலின் இயக்கச் சக்தி குறைந்து, சக்தி பற்றாக்குறை ஏற்படும் போது வலி உருவாகலாம்.
4. உடலின் ஆற்றல் ஒரே இடத்தில் குவியும் போது வலி உருவாகலாம்.
5. உடல் உழைப்புக்கு போதிய ஆற்றல் கிடைக்காமல் வலி உருவாகலாம்.
இன்னும் பல காரணங்களை குறிப்பிட்டாலும் மனித உடலின் நன்மைக்காக மட்டுமே வலிகள் உருவாகின்றன. உடலில் ஒரு இடத்தில் வலி உருவாகிறது என்றால் அங்கே குணப்படுத்தும் வேலை நடந்துக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். வலி நல்லது, அது உடலின் நன்மைக்காகவே உருவாகிறது.
தொடக்கத்தில் வலி, லேசாகத்தான் இருக்கும் அந்த வலியை இரசாயன மருந்துகள், எண்ணெய்கள், கிரீம், போன்றவற்றை கொண்டு அடக்கும் போது, நோயின் தீவிரம் அதிகரிக்கும். நோயை குணப்படுத்த உடல் அதிக உழைப்பையும் சக்தியையும் விரயமாக்குவதால் வலி அதிகரிக்கிறது.
உடலில் லேசான தொந்தரவுகளும் வலிகளும் இருக்கும் போதே, உடல் உழைப்பைக் குறைத்துக் கொண்டு, முக்கியமாக உணவைக் குறைத்து, உடலுக்கு போதிய ஓய்வுக் கொடுத்தால், வலிகள் தொடக்க கட்டத்திலேயே குறைந்து மறைந்துவிடும்.
இரவில் வெறும் வயிற்றில் உறங்குவது, நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். அதிகப்படியான பசி இருந்தால் வெறும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். கண்டிப்பாக இரவு ஒன்பது மணிக்குள் படுக்கைக்கு சென்றுவிட வேண்டும்.

Post a Comment