உணவு எளிதில் ஜீரணமாக சில வழிமுறைகள்

 

உணவு எளிதில் ஜீரணமாக சில வழிமுறைகள். உணவு வேளைகளில் இனிப்பான பழங்கள் உட்கொள்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். என் தாத்தா கூட உணவுக்கு முன்பு அல்லது பின்பு வாழைப்பழம் உட்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் இன்றைய தலைமுறையில் உணவுக்கு முன்பாக பழங்களை உட்கொள்ளும் பழக்கம் முற்றாக ஒழிந்துவிட்டது என்று கூட கூறலாம். உணவு வேளைகளில் இனிப்பு உட்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள் கூட இனிப்பான பழங்களுக்குப் பதிலாக இனிப்பு பலகாரங்களை உட்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

உணவைப் பரிமாறும் போது இனிப்பு வகைகள் பரிமாறப்படுவதை இன்றும் நாம் விருந்துகளில் காணலாம். விருந்து உணவுக்கு பின்னர் பாயாசம், இனிப்பான கஞ்சி அல்லது பலகாரங்கள் பரிமாறப்படுகின்றன. ஒரு சிலர் மட்டுமே விருந்துகளில் பழங்களை பரிமாறுகிறார்கள், பழங்களின் முக்கியத்துவம் இன்றைய மனிதர்களுக்குத் தெரியவில்லை என்றே கூறலாம்.

உணவை உட்கொண்ட பிறகு இனிப்பான பழங்களை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மையாகும். சமைத்த உணவை உட்கொண்டவுடன் பழங்களை சாப்பிடாமல், அரைமணி நேரம் கழித்து பழங்களை சாப்பிட்டால் அது ஜீரணத்துக்கு உதவியாக இருக்கும். உட்கொண்ட உணவின் ஜீரணமும் கழிவு நீக்கம் சீராக நடைபெறும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top