உடலின் கழிவு நீக்கங்கள்

 

தும்மல் –

நம் உடலுக்கு ஒவ்வாத தூசிகள் அல்லது கிருமிகள் சுவாசம் மூலமாக உடலுக்குள் சென்றுவிட்டால், உடல் அவற்றை வெளியேற்ற தும்மலை உருவாக்குகிறது. அவை முழுமையாக வெளியேறும் வரையில் தும்மல் தொடரும்.

சளி –

தும்மலை மருந்துகளைப் பயன்படுத்தி தடுக்கும் போது அல்லது உடலால் கழிவுகளை தும்மல் மூலமாக வெளியேற்ற முடியாத போது. அவை நுரையீரலைச் சென்றடைகின்றன. நுரையீரலில் சேர்ந்த கழிவுகளை சளியாக மாற்றி நுரையீரலிலிருந்து உடல் வெளியேற்றும்.

சளி கட்டி –

சளியாக கழிவுகளை வெளியேற்ற முடியாத போது, அந்த கழிவு கெட்டி சளியாக மாறுகிறது.

இருமல் –

அந்த கெட்டிச் சளியை வெளியேற்ற நுரையீரலுக்கு உதவுவதற்காக உடல் இருமலை உருவாக்கும். ஒரு துணியில் ஒட்டியிருக்கும் தூசியை வெளியேற்ற அதை உதறுவதைப் போன்ற செயல்.

காய்ச்சல் – 

இது மிக முக்கியமான செய்தி. கெட்டி சளியாக கூட கழிவுகளை உடலால் வெளியேற்ற முடியாத போது. அந்த கெட்டி சளியை திரவமாக மாற்றுவதற்கு உடல் காய்ச்சலை உருவாக்குகிறது. 

காய்ச்சல் இன்னும் பல நன்மையான காரணங்களுக்காகவும் உருவாகிறது. அவை, உடலில் நுழைந்த கிருமிகளைக் கொல்வதற்கு, உடலின் நோய்களைக் குணப்படுத்துவதற்கு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு, உடலின் ஆற்றலை அதிகரிக்க, மற்றும் இன்னும் பல நன்மையான காரணங்களுக்காக காய்ச்சல் உருவாகிறது.

வலிகள் – 

வலிகள் என்பவை ஒரு எச்சரிக்கை மட்டுமே. வலிகள் உண்டானால் உடலில் ஏதோ ஒரு உபாதை உருவாகி இருக்கிறது என்று அர்த்தம். (வலிகள் பற்றிய கட்டுரையை வாசிக்கவும்).

புண்கள் – 

உடல் மற்றும் இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் சில காரணங்களுக்காக தோலின் மூலமாக வெளியேறுகின்றன.

அரிப்பு –

உடலின் சக்தி ஓட்டத்தில் அடைப்பு ஏற்படும் போதும், தோலிலும் உடலிலும் கழிவுகள் அதிகமாக தேங்கும் போதும். தோலில் இரத்த ஓட்டம் தடைப்படும் போதும். அவற்றை உணர்த்தவும், அவற்றை சரிசெய்யவும் தோலில் அரிப்புகள் உண்டாகலாம்.

கட்டிகள் – 

உடலில் தேங்கி இருக்கும் நாள்பட்ட கழிவுகளை தோலின் மூலமாகவும், நேரடியாகவும் உடல் வெளியேற்றுகிறது. இந்த கட்டிகளைத் தடுத்தால், அந்த கழிவுகள் உடலின் உள்ளேயே கட்டியாக வளர்ந்துவிடும்.

வாந்தி - 

வயிற்றில் மற்றும் வயிறு வரையில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் செயல். வாயால் உட்கொண்ட உணவு அல்லது பொருட்கள் உடலுக்கு ஒவ்வாத போது. உடல் அவற்றை வாந்தியாக உடலை விட்டு வெளியேற்றும்.

வயிற்றுப்போக்கு -

உட்கொண்ட உணவு உடலுக்குக் கெடுதியாக இருந்தால். அது வயிற்றைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், அவை வயிற்றுப் போக்காக வெளியேறும்.

மேலே குறிப்பிடப்பட்ட 11 விசயங்களும் மிக முக்கியமான இயக்கங்கள். உடலுக்கு மிகவும் நன்மையான இந்த 11 இயக்கங்களை தடுக்கும் பொது, அவற்றைத் தொந்தரவு செய்யும் போது. கழிவுகள் உடலை விட்டு வெளியேற முடியாமல் உடலின் உள்ளேயே தேங்கிவிடுகின்றன.

உடலை விட்டு வெளியேற வேண்டிய இந்த கழிவுகளை, நோய் என்று நம்பி மருந்து மாத்திரைகளைக் கொண்டு தடுக்கும் போது. அவை உடலிலேயே தேங்கி, அடைப்பு, சொறி, சிரங்கு, இரைப்பு, உடல் உறுப்புகளில் பாதிப்பு, உடல் உறுப்புகளின் செயல்திறன் இழப்பு, பக்கவாதம், புற்றுநோய், போன்ற கொடிய நோய்களாக மாற்றமடைகின்றன.


அதனால் எந்த காரணத்தைக் கொண்டும். உங்கள் உடலில் இந்த 11 இயக்கங்கள் நடந்தால் அவற்றைத் தடுக்காதீர்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் இவற்றைத் தடுக்கும் போது, எதிர்காலத்தில் அவர்கள் கொடிய நோயாளிகளை அவதிபடுவதற்கு நீங்கள் தான் காரணமாக இருப்பார்கள். அதீத அன்பின் காரணமாக உங்கள் பிள்ளைகளை நோயாளிகளாக மாற்றிவிடாதீர்கள்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top