நவீன நோய்கள் உருவாவதற்கான காரணங்கள்
உடல்
0
Comments
நவீன நோய்கள் உருவாவதற்கான காரணங்கள். முந்தைய தலைமுறைகளுடன் ஒப்பிடுகையில், நவீன மருத்துவத்துறை பெரும் வளர்ச்சி அடைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் இன்றைய காலகட்டத்தில் தான், மனிதர்களுக்கு நோய்களும் உடல் உபாதைகளும் அதிகமாக உருவாகின்றன. நவீன மனிதர்களுக்கு நோய்களும் உடல் உபாதைகளும் அதிகரித்துக் கொண்டே இருப்பதற்கு சில முக்கியமான காரணங்கள் உள்ளன, அவை...
1. தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகள்.
2. உடலுக்கு ஒத்துக்கொள்ளாத மேலும் ரசாயனம் கலந்த உணவுகள்.
3. உடலின் இயக்கத்திற்கும் நோய்க்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்கள்.
4. உடலில் என்ன மாற்றம் நடந்தாலும் அதை நோயாகக் கருதி அச்சப்படும் மனிதர்கள்.
5. மனிதர்களின் உண்மையான நோய்களைக் கண்டறிய முடியாத மருத்துவர்கள்.
6. உண்மையான நோயை ஆராயாமல், உடல் காட்டும் அறிகுறிகளுக்கு (symptoms) மட்டுமே வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள்.
7. நோய்களை குணப்படுத்துவதைக் காட்டிலும், புதிய நோய்களை உருவாக்கும் இரசாயன மருந்துகள்.
8. பல வகையான மருந்து மாத்திரைகளை ஒன்றாக உட்கொள்ளும் போது உண்டாகும் பக்கவிளைவுகள்.
9. இவற்றுடன் சேர்ந்து, மனிதர்களுக்கு உடல் மற்றும் மருத்துவத்தின் மீது இருக்கும் தவறான கண்ணோட்டங்கள்.
10. மருத்துவம் செய்துகொண்டால் அனைத்து உடல் உபாதைகளும் குணமாகிவிடும் என்ற அலட்சியப் போக்கு.

Post a Comment