மனதை அடக்குவது எப்படி? - 3

 

மனதை அடக்குவது எப்படி?. மனதைக் கட்டுப்படுத்த வழியே இல்லையா என்று கேட்டால்? ஒரேயொரு வழி இருக்கிறது. அதுதான் மனதினுள் தேவையற்ற பதிவுகள் உருவாகாமல் பாதுகாப்பது. மனதில் உருவாகும் பதிவுகள்தான் மனிதர்கள் தவறு செய்வதற்குக் காரணமாக இருக்கிறது, அவ்வாறு தவறு செய்வதற்கு தூண்டக்கூடிய பதிவுகள் உருவாகாமல் கவனமாக இருந்தால் போதும் மனதில் தீய எண்ணங்கள் உண்டாகாது.

உதாரணத்திற்கு “உங்களுக்கு விருப்பமான உணவு எது?” என்று யாரையாவது கேட்டால் அவரவர் மனப்பதிவில் எந்த உணவின் அனுபவம் இருக்கிறதோ, அவற்றில் எது மிகவும் அவரை கவர்ந்ததோ அதைச் சொல்வார். அதைப்போல் ஒருவரிடம் உலகிலேயே உனக்குப் பிடித்த நபர் யார் என்று கேட்டால், அந்த நபரின் வாழ்க்கையில் குறுக்கிட்ட அவர் அனுபவத்தில் இருக்கும் யாராவது ஒரு நபரைக் குறிப்பிடுவார். 

மனிதர்கள் எனக்கு விருப்பமானது, எனக்குத் தேவையானது, எனக்கு செய்ய விருப்பம் என்று கூறும், தேர்ந்தெடுக்கும் அனைத்துமே அவர்களின் மன பதிவுகளினால் முடிவு செய்யப்படுகின்றன. 


அதனால் மனதில் பதிந்திருக்கும் பயனற்ற பதிவுகளை நீக்கிவிட்டு, பயனான புதிய பதிவுகளை உருவாக்கினால் மனம் தெளிவடையும். தீய எண்ணங்களும் சிந்தனைகளும் தோன்றாது. தீய செயல்கள் மற்றும் தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட்டு சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும். 

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top