மனதை அடக்குவது எப்படி? - 2
மனம்
0
Comments
மனதை அடக்குவது எப்படி?. இன்று ஒரு மனிதன் செய்யும் தவறுக்கு இன்றோ நேற்றோ மனதில் பதிந்த பதிவுகள் தான் காரணம் என்று சொல்ல முடியாது, என்றோ இளம் வயதில் அவன் மனதில் பதிந்துவிட்ட ஒரு பதிவுகூட அவன் நாற்பது வயதில் தவறு செய்வதற்குக் காரணமாக இருக்கலாம்.
மனதைக் கட்டுப்படுத்த முடியாதா? மனதை அடக்க முடியாத? இவ்வாறான கேள்வி அனைவராலும் காலகாலமாக கேட்கப்பட்டு வருகிறது. மனதை அடக்கவும் அதைக் கட்டுப்படுத்தவும் பலர் பயிற்சிகளும் கொடுக்கிறார்கள். உண்மை என்னவென்றால், மனதை அடக்கவோ கட்டுப்படுத்தவோ யாராலும் முடியாது.
பெரிய முனிவர்கள் கூட மனஇச்சைக்குக் கட்டுப்பட்டு தவறுகள் செய்வதை, நாம் பல இதிகாசங்களிலும் புராணங்களிலும் படித்திருப்போம். உயர்ந்த இடத்தில் இருக்கும் பலரும் தங்கள் தகுதிக்கு சம்பந்தமில்லாத ஈனச் செயல்களைச் செய்வதை இன்றும் நாளிதழ்களிலும் இணையத்திலும் பார்க்கிறோம். இவை அனைத்துக்கும் காரணம் ஐம்பொறிகளின் உதவியுடன் அவர்களின் மனதுக்குள் பதிந்துவிட்ட பதிவுகள் தான்.

Post a Comment