மனதை அடக்குவது எப்படி? - 1

 

மனதை அடக்குவது எப்படி? வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர்களே கிடையாது என்று சொல்லும் அளவுக்கு, அத்தனை மனிதர்களும் ஏதாவது ஒரு வகையான தவறை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஒரு தவற்றைச் செய்வதும் பின் அதை நினைத்து வருந்துவதும், மீண்டும் தவறு செய்யக்கூடாது என்று எண்ணுவதும், சில நாட்களில் அதே தவறை மீண்டும் செய்வதும் பலருக்கு தொடர்கதையாகவே இருக்கிறது. 

தீய பழக்கம் என்று உணர்ந்து அந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும் என்று விரும்பியும், அதை விடமுடியாமல் சிலர் அவதிப்படுவார்கள். சிலர் இன்றோடு இந்தப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும், மறந்துவிட வேண்டும் என்று பலமுறை முயன்றும் தோற்றுப் போயிருப்பார்கள்.

இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? மனிதர்கள் எதனால் தவறு செய்கிறார்கள்? அதுவும் தவறு என்று தெரிந்தும் எதனால் மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்? தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்று முடிவுசெய்த பிறகும் அவர்களை மீறி தவறுகளைச் செய்ய வைப்பது எது? என்பதை ஆராய்ந்தால்…

மனிதர்கள் செய்யும் அத்தனை தவறுகளுக்கும் அவர்களின் மனம்தான் காரணமாக இருக்கிறது. மனிதர்கள் தங்களின் ஐம்பொறிகளைக் கொண்டு காண்பது, கேட்பது, சுவைப்பது, நுகர்வது, மற்றும் உணர்வதன் மூலமாக; அவர்களின் மனதில் உருவாகும் பதிவுகளே, அவர்களை தவறு செய்யத் தூண்டுகிறது.


சரி - தவறு என்ற பேதம் இல்லாமல் மனிதர்களின் ஐம்பொறிகள் அனுபவம் செய்யும் அனைத்தையும் மனம் பதிவு செய்துகொள்கிறது. இந்தப் பதிவுகள் அதற்கான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஏற்படும் வேளைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றன. அந்தப் பதிவுகளால் தோன்றும் எண்ணங்கள் மற்றும் ஆசைகளுக்கு ஏற்ப மனம் இயங்குகிறது மனிதனை இயக்குகிறது.

தொடரும் ...


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top