குழந்தைகளை கட்டுப்படுத்த அல்லது அடக்கி வைக்க எண்ணாதீர்கள்
சிறுவர்கள்
0
Comments
குழந்தைகளை கட்டுப்படுத்த அல்லது அடக்கி வைக்க எண்ணாதீர்கள். பெரியவர்களைவிடவும் குழந்தைகள் புதிய விசயங்களை கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் அனுதினமும் புதிய விசயங்களை பார்க்கிறார்கள், கேட்கிறார்கள், அவர்களை சுற்றி நிகழும், இருக்கும், ஒவ்வொன்றையும் கவனித்து கற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் குழந்தைகள் உடலால் மட்டுமின்றி மனதாலும் வளர்கிறார்கள், அவர்களின் அறிவு வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை கட்டுப்படுத்த அல்லது அடக்கி வைக்க எண்ணாதீர்கள்.
1. ஒவ்வொரு விசயத்திலும் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், அவர்களின் கருத்துக்களை கேளுங்கள்.
2. பிள்ளைகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை புரியவையுங்கள்.
3. பிள்ளைகள் கேட்காமல் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாதீர்கள்.
4. பிள்ளைகளுக்கு ஒரு வழிகாட்டியாக நடந்து கொள்ளுங்கள் அவர்களை வற்புறுத்தாதீர்கள்.
5. பிள்ளைகளுடன் அன்பாக நண்பர்களைப் போன்று பேசுங்கள் நடந்துகொள்ளுங்கள்.

Post a Comment