குழந்தைகள் தைரியமாக வளர்வதற்கு

 

குழந்தைகள் தைரியமாக வளர்வதற்கு நம் பாரம்பரியம், பண்பாடு, நாகரிகம், வரலாறு; நம் முன்னோர்களின் வீரம், கலாச்சாரம் போன்றவற்றை சிறுவயது முதலே சொல்லி வளர்க்க வேண்டும். 

இறைவன், மதம், சமயம், ஆன்மீகம் போன்ற விசயங்களை பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். ஆன்மீக அறிமுகம் என்பது, நமது நம்பிக்கை, மூட நம்பிக்கை, மற்றும் பழக்க வழக்கங்களை பிள்ளைகளின் மீது திணிப்பதாக இருக்கக்கூடாது. நாம் கூறும் விசயங்களைக் கேட்டுச் சிந்தித்து, பிள்ளைகள் எதிர்க் கேள்விகள் கேட்கும் அளவுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களை பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு சவாலையும் ஒவ்வொரு பிரச்சனையையும் பிள்ளைகளுடன் விவாதியுங்கள், உங்கள் பிள்ளைகளின் ஆலோசனைகளைக் கேளுங்கள். இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைப் புரியவையுங்கள். வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்குங்கள், குறிப்பாக தினமும் நாளிதழை வாசிக்கத் தூண்டுங்கள்.
 
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நல்ல மற்றும் கெட்ட விசயங்களை உங்கள் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொண்டால் மட்டுமே உங்கள் பிள்ளைகளுக்கும் தங்களின் பிரச்சனைகளை பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் அவர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்று தோன்றும். நாளை பெரியவர்கள் ஆனதும் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளே அடக்கி வைக்காமல் மற்றவர்களுடன் கலந்தாலோசனை செய்து, அதற்கான தீர்வை தேடுவார்கள்.

சிறுவயது முதலே மனத் திட்டத்துடன் வளரும் பிள்ளைகள் எந்த வகையான சவாலையும் சமாளித்து தைரியமாக, வெற்றிகரமான மனிதர்களாக வளர்வார்கள் வாழ்வார்கள்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top