ஆரோக்கியமாக வாழ்வது இலவசம்தான் - 1
ஆரோக்கியம்
0
Comments
ஆரோக்கியமாக வாழ்வது இலவசம்தான், ஆனால் நோயாளிகளாக வாழ்வதற்கு மட்டுமே பணம் செலவழிக்க வேண்டியது வரும்.
எப்போதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டால் பெரும்பாலானவர்கள்,
1. அதை சாப்பிட வேண்டும், இதை சாப்பிட வேண்டும், அல்லது அதை சாப்பிட கூடாது, இதை சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள்.
2. காலையில் எழுந்தவுடன் 4 கிளாஸ் தண்ணீர் அருந்த வேண்டும். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறீர்களோ அவ்வளவு நல்லது என்று கூறுவார்கள்.
3. சிலர் பழங்களையும் சாப்பிட கூடாது. குறிப்பாக நோய் கண்டவர்கள் பலவகையான பழங்களை சாப்பிட கூடாது என்று கூறுவார்கள்.
4. பார்த்து பார்த்து பயந்து பயந்து உணவை தேர்ந்தெடுத்து உற்கொள்ள வேண்டும். உணவு வகைகளை நன்றாக ஆராய்ந்து பின்புதான் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள்.
5. அதிக உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறுவார்கள்.
6. எல்லோராலும் ஆரோக்கியமாக வாழ முடியாது, ஆரோக்கியமாக வாழ்வது மிகக் கடினம் என்று கூறுவார்கள்.
7. ஆரோக்கியமாக வாழ்வதற்கு நிறைய செலவு செய்ய வேண்டும். சத்து மாத்திரைகள், சத்து உணவுகள் சாப்பிட வேண்டும்
8. வருடா வருடம் உடல் பரிசோதனைக்கு செல்ல வேண்டும். மருத்துவர் சொல்வதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
9. உடலில் சிறிய தொந்தரவு தோன்றினாலும் உடனே மருத்துவரை நாட வேண்டும்.

Post a Comment