280726 வலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும் - 1


வலிகளும் அவற்றுக்கான காரணங்களும் தீர்வுகளும். பெரும்பாலான துன்பங்களை தங்கிக்கொள்ளும் மனிதர்களுக்கு, உடலில் வலி உண்டானால் மட்டும் அதனை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருப்பதில்லை. சிறு வலிகளை கூட பொறுத்துக்கொள்ளாமல் வலி நிவாரண மருந்துகளை தேடி ஓடுகிறார்கள். அந்த போதை மருந்துகள், மனிதர்கள் வலிகளை உணராதவாறு அவர்களின் மூளையையும் உடலையும் மந்தமாக்குகிறது. 

ஒருவர் சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டார் அல்லது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். கை, கால், முட்டிகளில், சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. விழுந்த அந்த நிமிடம் எழுந்தவுடன் அவருக்கு வலிகள் இருக்குமா?. சிந்தித்துப் பாருங்கள் வலிக்குமா? கண்டிப்பாக அப்போது வலிகள் இருக்காது. அடிப்பட்ட உணர்வுகூட இருக்காது. ஆனால் அன்று இரவு வலி லேசாக ஆரம்பிக்கும், தூங்கி எழுந்த மறுநாள் அதிகப்படியான வலியாகவும், வீக்கமும், கை கால் அசைக்க முடியாத சூழ்நிலை கூட ஏற்படலாம்.

பல ஆண்களுக்கு இந்த அனுபவம் இருக்கும், ஏன் இந்த வினோதம்? விழுந்ததும், காயம் ஏற்பட்டதும் வலிக்காமல், எதனால் அன்று இரவு வலிக்கிறது?. மறுநாள் ஏன் வலி அதிகரிக்கிறது?. பதிலை பிறகு பார்ப்போம்.


ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு ஐந்து நாட்களாக மலம் கழிக்க வில்லை என்று வைத்துக்கொள்வோம். ஐந்தாவது நாள் வயிற்று வலி ஏற்பட்டு, சிரமப்பட்டு மலம் கழிக்கிறார். ஐந்து நாள் மலம் கழிக்காமல் இருந்த போது, உருவாகாத வயிற்றுவலி, ஐந்தாவது நாள், மலம் வெளியேறும் போது ஏன் ஏற்படுகிறது?. பதிலை பிறகு பார்ப்போம்.

ஒரு பெண் கர்ப்பம் தரித்து பத்து மாதங்கள் ஒரு குழந்தையை சுமக்கிறாள். பத்து மாதங்கள் சுமக்கும் போது ஏற்படாத வலி, அந்தக் குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருந்து வெளியேறும் போது ஏன் உருவாகிறது?. பதிலை பிறகு பார்ப்போம்.

தொடரும்…


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top