காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் குடிக்கலாமா?
காய்ச்சல்
0
Comments
ஒருவருக்கு அம்மை நோய் உண்டானால் என்ன செய்வார்கள்?. வேப்ப இலையில் படுக்க வைப்பார்கள். வேப்ப இலைகளை அரைத்து அம்மையின் மீது பற்று போடுவார்கள். வேப்ப இலைகளை அரைத்து அல்லது போடி செய்து உண்ணக் கொடுப்பார்கள். அதே மருத்துவ முறைதான் இது.
காய்ச்சல் கண்டவர்கள் நிலவேம்பு கசாயம் அல்லது வேப்பங்கொழுந்து அரைத்து அல்லது பொடி செய்து சாப்பிடும் போது உடலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலின் உஷ்ணம் குறையும். நிலவேம்பு கசாயம் நோயை போக்காது ஆனால் எதிர்ப்பு சக்தியை பலபடுத்தும். எதிர்ப்பு சக்தி பலமானதும் உடல்தான் நோயை சுயமாக குணப்படுத்திக் கொள்ளும்.
காய்ச்சல் இல்லாதவர்கள் குடிக்க தேவையில்லை. காய்ச்சல் அதிகமாக இருந்தால். நாளைக்கு ஒருவேளை என மூன்று நாட்கள் மட்டும் குடிக்கலாம். அதற்கு மேல் தேவையில்லை.

Post a Comment