சீனர்களின் மனை சாஸ்திரத்தின்படி குடியிருக்கக் கூடாத இடங்கள்

(Photo by Lan Lin on Unsplash)

சீனர்களின் மனை சாஸ்திரத்தின்படி குடியிருக்கக் கூடாத இடங்கள். சிலர் தங்கள் வாழ்க்கையில் காரணங்களே இல்லாமல் பல இன்னல்களை அனுபவிப்பார்கள். எந்த காரணமுமின்றி எதிர்ப்பாராத நோய்களும், துன்பங்களும், துயரங்களும், குடும்பத்தில் சண்டைகளும், சச்சரவுகளும், பகைகளும், பிரிவுகளும், மரணங்களும் நடக்கலாம். தொழில் புரியும் அல்லது வேலை செய்யும் இடத்தில் தேக்கமும், பகையும், சண்டைகளும், மனஸ்தாபங்களும், கடனும், நஷ்டங்களும், ஏற்படலாம்.

இந்த நிகழ்வுகளுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் எந்த காரணக் காரியங்களும் இன்றி நடந்தால், குடியிருக்கும் அல்லது தொழில் புரியும் இடம் ஒரு முக்கிய காரணமாகவும் இருக்கலாம். 

நாம் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் கட்டிடத்தின் விவரங்கள் நமக்குத் தெரியலாம் ஆனால் அந்த கட்டிடத்தின் கீழே மண்ணில் என்ன இருக்கின்றது என்பது நமக்கு தெரியாது அல்லவா. நம் கண்ணுக்கு புலப்படாத சக்திகள் அந்த இடங்களில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதும் தெரியாது அல்லவா.

நாம் குடியிருக்கும் வீடு அல்லது தொழில் புரியும் இடத்தில் மனைக் கோளாறுகள், நாம் அனுபவிக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம். அவற்றை பற்றி இப்போது பார்ப்போம். 

இந்த பூமியில் இருக்கும் ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு சக்தியும் அதிர்வும் இருக்கும் அதற்கு ஏற்றாற்போல் அதை சுற்றி இருப்பவரின் வாழ்க்கை மாறும்.


குடியிருக்க மற்றும் தொழில் புரிய கூடாத இடங்கள் 

1. கோயில், பள்ளிவாசல் போன்ற வழிபட்டு தலங்களுக்கு சொந்தமான இடங்களில், முறையான அனுமதியின்றி குடியேற கூடாது.

2. தோட்டம், காடு, மற்றும் நிலத்தில், இருந்த பழைய பெரிய மரங்களை வெட்டிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டுவது நல்லதல்ல. 

3. வழிபாட்டு தலங்கள், குளம், ஆறு, அல்லது சுடுகாட்டை, அழித்து சமமாக்கிய நிலங்களில் குடியேறக் கூடாது.

4. பல வருடங்களாக யாரும் குடியிருக்காத, விளக்கு எரியாத கட்டடங்களில் குடியிருக்கக் கூடாது.

5. சாலையை அல்லது பாதையை விட தாழ்வான இடத்தில் இருக்கும் கட்டடங்களில் குடியிருக்கவோ வியாபாரம் செய்யவோக் கூடாது.

6. மேம்பாலத்தின் அருகாமையில் இருக்கும் வீட்டில் கட்டிடத்தில் குடியிருக்கவோ வியாபாரம் செய்யவோக் கூடாது.

7. முச்சந்தி வளைவு சந்திக்கும் இடத்தில், அல்லது பாதையில், அல்லது சாலைகள் சந்திக்கும் இடத்தில் வசிக்கக் கூடாது.

8. சாலை கட்டிடத்தின் வாசலில் அல்லது வீட்டின் வாசலில் முடிவடைந்தால், உடனடியாக கட்டிடத்தை காலி செய்துவிட வேண்டும்.

உங்களுக்கு தெரிந்த வாஸ்து தொடர்புடைய மற்ற குறிப்புகளை கீழே பதிவு செய்யலாம். 


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top