உயிர் கொத்திப் பறவை - கவிதை
கவிதைகள்
0
Comments
ஒவ்வொரு நொடியும் – என்
உயிரைக் குடிக்கும் அவள்
உயிர் கொத்திப் பறவை
என்னுயிர் குடித்து
அவள் உயிர் வளர்க்கிறாள்
என்ன தாகமோ?
என்று அடங்குமோ?
தெரியவில்லை
பூமியின் உயிர் குடித்து
வளரும் மரம்
கனிகளை மனிதர்களுக்குக்
கொடுப்பதைப் போன்று
என்னுயிர் குடித்து
வளரும் அவள்
அன்பையும் காதலையும்
அவனிடம் காட்டுகிறாள்

Post a Comment