வலிகளும் அவற்றுக்கான காரணங்களும்

வலிகளும் அவற்றுக்கான காரணங்களும். எந்தத் துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இருக்கிறது, ஆனால் வலி உண்டானால் மட்டும் அவற்றைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் மனிதர்களிடம் இல்லை.

மனிதர்கள் மிகவும் பலவீனமானவர்கள், சிறு வலிகளைக் கூட பொறுத்துக் கொள்ளாமல் வலி நிவாரண மருந்துகளைத் தேடி ஓடுகிறார்கள். அந்த போதை மருந்துகள், பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வலிகளை உணராதவாறு அவர்களின் மூளையையும் உடலையும் மந்தமாக்குகிறது. இது அவர்களுக்கு கேடானது.

ஒருவர் சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டார் அல்லது மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். கை, கால், முட்டிகளில், சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. விழுந்த அந்த நிமிடம் எழுந்தவுடன் அவருக்கு வலிகள் இருக்குமா? சிந்தித்துப் பாருங்கள் வலிக்குமா? கண்டிப்பாக அப்போது வலி இருக்காது. அடிப்பட்ட உணர்வு கூட இருக்காது. ஆனால் அன்று இரவு வலி லேசாக ஆரம்பிக்கும், தூங்கி எழுந்த மறுநாள் அதிகப்படியான வலியாகவும், வீக்கமும், கை கால் அசைக்க முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படலாம்.

பல ஆண்களுக்கு இந்த அனுபவம் இருக்கும், ஏன் இந்த வினோதம். விழுந்ததும் வலிக்காமல், ஏன் இரவு வலிக்கிறது? மறுநாள் ஏன் வலி அதிகரிக்கிறது? பதிலை பின்பு பார்ப்போம்.

ஒருவருக்கு மலச்சிக்கல் ஏற்பட்டு ஐந்து நாட்களாக மலம் கழிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆறாவது நாள் வயிற்று வலி ஏற்பட்டு, சிரமப்பட்டு மலம் கழிக்கிறார். ஐந்து நாள் மலம் கழிக்காமல் இருந்த போது உருவாகாத வயிற்றுவலி, ஆறாவது நாள் மலம் வெளியேறும் போது ஏன் ஏற்படுகிறது? பதிலை பின்பு பார்ப்போம்.

ஒரு பெண் கர்ப்பம் தரித்து பத்து மாதங்கள் ஒரு குழந்தையைச் சுமக்கிறாள். பத்து மாதங்கள் சுமக்கும் போது ஏற்படாத வலி, அந்தக் குழந்தை தாயின் கர்ப்பப்பையில் இருந்து வெளியேறும் போது ஏன் உருவாகிறது?

இப்போது மேலே குறிப்பிட்ட சூழ்நிலைகளில் உருவாகும் வலிகளுக்கான காரணங்களை தெரிந்துகொள்வோம்.


வலிகள் எதனால் உருவாகின்றன?

ஒரு மனிதனுக்கு வலிகள் உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அவற்றில் சில.

1. ஒருவரின் நோய் குணமாகும் போது வலி உருவாகலாம்.

2. உடலின் இயக்கத்திறன் அதிகரிக்கும் போது வலி உருவாகலாம்.

3. உடலின் இயக்கச் சக்தி குறைந்து, சக்தி பற்றாக்குறை ஏற்படும் போது வலி உருவாகலாம்.

4. உடலின் சக்தி ஒரே இடத்தில் குவியும் போது வலி உருவாகலாம்.

5. உடல் உழைப்புக்கு போதிய சக்தி கிடைக்காததால் வலி உருவாகலாம்.

இன்னும் பல காரணங்களை குறிப்பிட்டாலும் மனித உடலின் நன்மைக்காக மட்டுமே உடலில் வலி உருவாகிறது. உடலில் ஒரு இடத்தில் வலி உருவாகிறது என்றால் அங்கே குணப்படுத்தும் வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்பது பொருளாகும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top