உடல் பலவீனமாக இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது?


உடல் பலவீனமாக இருக்கிறது என்பதை எவ்வாறு அறிந்துக் கொள்வது? உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கு, அவர்கள் உட்கொள்ளும் உணவு எளிதில் ஜீரணமாகாது. அவர்களுக்கு உணவை உட்கொண்டவுடன் அசதியும் சோர்வும் உண்டாகும். தூங்கி எழுந்தால் தான் அவர்களின் உடலால் மீண்டும் இயல்பாக செயல்பட முடியும்.

அவர்களின் உடல் விரைவில் சோர்வடையும், சோம்பலும், எரிச்சலும், அடிக்கடி அசதியும் உண்டாகும். அஜீரணம், மலச்சிக்கல் உண்டாகும், அடிக்கடி தலைவலி உண்டாகும்.

இவை அனைத்தும் உடலின் பலவீனத்தைக் குறிக்கும் அறிகுறிகள். இவற்றை அலட்சியப் படுத்தும் போது தான் நோய் உண்டாக தொடங்கும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top