மனதைச் சரி செய்யும் வழிமுறை


மனதைச் சரி செய்யும் வழிமுறை. மனம் தான் மனிதனின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது, மனதைச் சரி செய்தால் அனைத்தும் சரியாகும். மனதைச் சரிசெய்ய வேண்டும் சரி, ஆனால் உடலில் மனம் என்று தனியாக ஒரு உறுப்பு இல்லையே, எவ்வாறு மனதைக் கண்டறிந்து சரி செய்ய முடியும்? மனம் தலைமுடி முதல் உள்ளங்கால் வரையில் முழுமையாகப் படர்ந்திருக்கும் சூட்சும உடல், அதை எவ்வாறு சரிசெய்ய முடியும்?

தலைமுடியைத் திருத்தும்போது தவறாக வெட்டிவிட்டால் மனம் வருத்தப்படுகிறது. பெண்களின் கூந்தலில் சூடிய பூ உதிர்ந்துவிட்டால் மனம் வாடுகிறது. சுண்டுவிரல் அடிபட்டாலும் மனம் பாதிக்கிறது. காலில் முள் குத்திவிட்டாலும் மனம் பாதிக்கிறது. உள்ளுறுப்புகளில் தொந்தரவு உண்டானாலும் மனம் பாதிக்கிறது. தோளில் புண் உண்டானாலும் மனம் பாதிக்கிறது. அடுத்தவர் தவறான வார்த்தை பேசிவிட்டாலும் மனம் பாதிக்கிறது. தவறான ஒரு காட்சியைக் கண்டு விட்டாலும் மனம் வலிக்கிறது. வாழ்க்கையில் பிடிக்காத ஒரு விசயம் நடந்து விட்டாலும் மனம் வேதனைப்படுகிறது. இவ்வாறு, மனித உடலின் உள்ளும் புறமும், வெளியில் மற்ற இடங்களிலும் சுற்றி இருக்கும் அத்தனை விசயங்களும் மனதைப் பாதிக்கக் கூடியவை.

அதனால் எந்த வெளி விசயங்களைக் கொண்டும் மனதைச் சரி செய்ய முடியாது. மனதுக்குள் உண்டாகும் மாற்றங்களைக் கொண்டும் பதிவுகளைக் கொண்டும் மட்டுமே மனதைச் சரி செய்ய முடியும்.

கோழிக் குஞ்சு முட்டைக்கு உள்ளிருந்து உடைத்துக் கொண்டு வருவதைப் போன்று, மனதை உள்ளுக்குள் இருந்து சரி செய்ய வேண்டும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top