இன்றைய மருத்துவத்தின் நிலை

 

ஒரு நாள் காதர் பாயின் இடது கால் நீல நிறமாக மாறியது. அவர் பயந்து போய் ஊரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடம் ஆலோசனை கேட்டார்.

அங்கு ஒரு மருத்துவர் பரிசோதனை செய்துவிட்டு காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு வழியின்றி காலை எடுத்துவிட ஒப்புக் கொண்டார்.

சில நாட்களுக்குப் பிறகு வலது காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்குச் சென்றார் காதர் பாய். வலது காலிலும் விஷம் ஏறி விட்டது என்று சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன காதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார்.

இரு கால்களையும் இழந்து, கட்டைக் கால்களுடன் நடமாடிக் கொண்டிருந்த பாய்-க்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாற தொடங்கின, பதற்றத்துடன் அதே மருத்துவரை அணுக, மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம்.

மீண்டும் தொடக்கத்திலிருந்து அனைத்து வகையான உடல் பரிசோதனைகளையும் முடித்த பின் மருத்துவர் சொன்னார், “காதர் பாய், உங்கள் லுங்கி சாயம் போகிறது, மன்னித்து விடுங்கள்”.

இதுதான் இன்றைய பெரும்பாலான மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் நிலை. இந்தக் கதை சிரிப்பதற்க்கு அல்ல; சிந்திப்பதற்கு.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top