ஹார்ன்பீம் மலர் மருந்து

ஹார்ன்பீம் மலர் மருந்து (Hornbeam), மனதளவிலும் உடலளவிலும் சோர்வாகவும், எதிலும் ஆர்வம் இல்லாமலும் இருக்கும் நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஹார்ன்பீம் மலர் மருந்தின் குணாதிசயங்கள்

ஹார்ன்பீம் குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், காலையில் எழும்போது உற்சாகம் இல்லாமல் சோர்வாக இருப்பார்கள். இவர்களுக்கு எதிலும் ஆர்வம் இல்லாமல் வாழ்க்கையே சலிப்பாக தெரியும்.

எந்த வேலையையும் உடனே செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். மன தெளிவு இல்லாததால் எந்த விசயத்திலும் முடிவெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கும்.


ஹார்ன்பீம் மலர் மருந்தின் பயன்கள்

ஹார்ன்பீம் மலர் மருந்து மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. வாழ்க்கையின் மீது மீண்டும் ஆர்வத்தை தூண்டுகிறது. வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிக்க உதவுகிறது.

மனதில் தெளிவை ஏற்படுத்தி, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது. தன்னம்பிக்கையை அதிகரித்து, நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறது.


இந்த மலர் மருந்து, மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top