ஹீதர் மலர் மருந்து

ஹீதர் மலர் மருந்து (Heather), தனிமையை விரும்பாது, எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க நினைக்கும் நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஹீதர் மலர் மருந்தின் குணாதிசயங்கள்

ஹீதர் குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், தனிமையை விரும்பாமல், எப்போதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக தொடர்ந்து எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் எப்போதும் தன்னைப் பற்றியே சிந்திப்பார்கள்.

தங்கள் மீது கவனம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக, மற்றவர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள். தங்கள் மனதில் உள்ள அழுத்தங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.


ஹீதர் மலர் மருந்தின் பயன்கள்

ஹீதர் மலர் மருந்து தன்னைத்தானே புரிந்துக் கொள்ளவும், தனிமையை ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறது. அமைதியாக இருக்கவும், மற்றவர்களின் கருத்துகளைக் கேட்கவும் உதவுகிறது. மற்றவர்களை புரிந்துக் கொள்ளவும், அவர்களின் உணர்வுகளை மதிக்கவும் உதவுகிறது.

மற்றவர்களை கட்டுப்படுத்தாமல் அவர்களிடம் அன்பு செலுத்த உதவுகிறது. உணர்வுகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.


இந்த மலர் மருந்து, தன்னைத் தானே புரிந்துக் கொள்ளவும், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கவும் உதவுகிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top