ஆஸ்பென் மலர் மருந்து

ஆஸ்பென் மலர் மருந்து (Aspen), காரணமில்லாத பயம் அல்லது பதட்டம் உள்ள நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஆஸ்பென் மலர் மருந்தின் குணாதிசயங்கள்

ஆஸ்பென்னின் குணாதிசயங்கள் உள்ள மனிதர்களுக்கு, எதனால் பயம் ஏற்படுகிறது என்று தெரியாமல், மனதில் ஒருவித பயம் இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களுக்கு காரணமற்ற அச்சம், பதட்டம், படபடப்பு, உடல் நடுக்கம் மற்றும் அமானுஷ்யம் பற்றிய பயம் போன்ற உணர்வுகள் இருக்கும்.

அவர்கள் எப்போதும் ஒருவித பதட்டத்தில் இருப்பார்கள். அமானுஷ்யம் அல்லது எதிர்காலத்தில் ஏதோ நடக்கப்போகிறது என்ற பயமும் மனதுக்குள் இருக்கும். அதனால் அவர்களின் மனம் எப்போதும் அமைதியாக இருக்காது. இந்த பிரச்சனைகளை அவர்கள் மற்றவர்களிடம் வெளிப்படுத்தவும் மாட்டார்கள்.


ஆஸ்பென் மலர் மருந்தின் பயன்கள்

ஆஸ்பென் மலர் மருந்து மனதில் ஏற்படும் தேவையற்ற எண்ணங்களைக் குறைத்து, மன அமைதியை அதிகரிக்கிறது. இது மனதில் உள்ள தேவையற்ற பயங்களை நீக்குவதால் மன தைரியம் அதிகரிக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களை குறைத்து மன அமைதியையும் அதிகரிக்கும்.

தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்கும் நபர்களுக்கு, உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.


இந்த மலர் மருந்து மனதின் ஆழ்மன உணர்வுகளை வெளிப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top