ரெஸ்க்யூ ரெமெடி மலர் மருந்து

ரெஸ்க்யூ ரெமெடி மலர் மருந்து (Rescue Remedy) அவசரக் காலங்களில் உதவுகிறது. இது ஐந்து மலர் மருந்துகளின் கலவையாகும். அவை:


ரெஸ்க்யூ ரெமெடியில் கலந்திருக்கும் மலர் மருந்துகள்

  1. ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (Star of Bethlehem)
  2. ராக் ரோஸ் (Rock Rose)
  3. இம்பேஷன்ஸ் (Impatiens)
  4. செர்ரி ப்ளம் (Cherry Plum)
  5. கிளமேடிஸ் (Clematis)

ரெஸ்க்யூ ரெமெடி அவசர காலங்களில் ஏற்படும் மன அழுத்தம், பதட்டம், மற்றும் பயம் போன்ற உணர்வுகளைக் குறைக்க உதவுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ரெஸ்க்யூ ரெமிடி மலர் மருந்தின் பயன்கள்

ரெஸ்க்யூ ரெமெடி விபத்துக்கள், அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அல்லது பிற அவசர காலங்களில் ஏற்படும் மன அழுத்தங்களை குறைக்க உதவுகிறது. முக்கியமான நிகழ்வுகள், தேர்வுகள் அல்லது மேடைப் பேச்சுக்கள் போன்ற பதட்டமான சூழ்நிலைகளில் துணைப் புரிகிறது.

அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் இது உதவுகிறது. அமைதியற்ற மனநிலை மற்றும் அதிகப்படியான கவலை உள்ளவர்களுக்கு இது தெளிவைக் கொடுக்கிறது. எளிதில் உணர்ச்சி வசப்படும் நபர்களுக்கும் பேருதவியாக இருக்கும்.


இந்த மலர் மருந்து, அவசர காலங்களில் மன அமைதியையும், தெளிவையும் கொடுக்கிறது.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top