பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வது எப்படி?

 

பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வது எப்படி? மனித வாழ்க்கை என்பதே ஆன்மாக்களுக்கான அனுபவமாகவும் பயிற்சியாகவும் இருப்பதனால் பிரச்சனைகளே இல்லாத மனித வாழ்க்கை என்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் அனுபவிக்க வேண்டிய அனுபவத்திற்கு ஏற்ப பிரச்சனைகள் உருவாகக் கூடும்.

ஆனாலும் மனித வாழ்க்கையில் பிரச்சனைகளும் துன்பங்களும் கண்டிப்பாக உண்டாக வேண்டும் என்று எந்த சட்டமும் இயற்கையில் கிடையாது. சூழ்நிலைக்கு ஏற்ப தெளிவாக சிந்தித்து சரியாக செயல்பட்டால் எந்த பிரச்சனையும் அண்டாமல் நிம்மதியாக வாழலாம்.

என்றும் நிம்மதியாக வாழ்வதற்கு வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சனைகளை தைரியமாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள வேண்டும். அவற்றின் மூலங்களையும், விளைவுகளையும் சிந்தித்து ஆராய வேண்டும். அத்தனை பிரச்சனைகளும் நமக்கு பாடமாக அமைவதனால், அவற்றை மனதுக்குள் சுமக்காமல் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு கடந்து செல்ல வேண்டும்.

இவ்வாறு செய்வதால் பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு கிடைத்துவிடும், மற்றும் எந்த பிரச்சனையாலும் நமக்கு மன வேதனையை உருவாக்காது.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top