அன்பு - பாசம் - அறிவு - நிம்மதி

 

அன்பு என்பது, தனது மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு பிற உயிர்களும் காரணம் என்பதை உணர்ந்துக் கொண்டு பிற உயிர்களுடன் நன்றி பாராட்டுவது.

பாசம் என்பது, உன்னை என் உறவாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சக மனிதர்களுடன் அன்பைப் பகிர்ந்துக் கொள்வது.

அமைதி என்பது, மனித வாழ்க்கையில் அனைத்தும் மாற்றத்துக்கு உரியது என்பதைப் புரிந்துக் கொண்டு மனச் சாந்தியடைவது.

நிம்மதி என்பது, என் வாழ்க்கையில் அனைத்தும் சரியான நேரத்தில் சரியாக நடக்கும் என்று புரிந்துக் கொண்டு தைரியமாக இருப்பது.

அறிவு என்பது, கேள்விகள் மீண்டும் மீண்டும் எழும் அளவுக்கு தேடித்தேடி அனைத்தையும் கற்றுக் கொள்வது.

தெளிவு என்பது, கேள்விகளுக்கு முடிவே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டு பார்வையாளராக விலகி இருப்பது.

ஞானம் என்பது, தன்னுயிரின் மூலத்தையும் முடிவையும் தானாகத் தேடி, அறிந்து, உணர்ந்துக் கொள்வது.

To Top