நினைவுகள் கவிதை

 

நெருப்பினைத்
தழுவிய நினைவுகள்
இன்றும் என்
மனதின் தழும்பாக
உன் உஷ்ணம்
துடிப்பு, ஸ்பரிசம்
ரோஜா இதழினும்
மென்மையான
உன் கழுத்தில்
உறவாடிய நிமிடங்கள் 
வருடங்கள் கழிந்தும்
நெஞ்சில் மலர்ந்து 
மணக்கிறது

To Top