பஞ்சபூதங்கள் எவ்வாறு மனித உடலில் உற்பத்தியாகின்றன?
பஞ்சபூதங்கள் எவ்வாறு மனித உடலில் உற்பத்தியாகின்றன? மனித உடலின் இயக்கத்திற்கும், குணப்படுத்தும் வேலைக்கும், தேவையான பஞ்சபூத ஆற்றல்கள் அல்லது ஐம்பூதங்கள், உடலின் ஐந்து உள் உறுப்புகளின் மூலமாக உற்பத்தி ஆகின்றன. உடலின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றல்களை உற்பத்தி செய்யும் இந்த உறுப்புகள், அக்குபஞ்சரில் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
அவை, இருதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகங்கள், மற்றும் கல்லீரல் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒரு பஞ்சபூத ஆற்றலை, உற்பத்தி செய்யவும், உடலுக்கு வழங்கவும், கட்டுப்படுத்தவும், ஆற்றல் கொண்டவை.
ராஜ உறுப்புகள் மற்றும் அவை உற்பத்தி செய்யும் பஞ்சபூத ஆற்றல்களின் அட்டவணைகள்.
| உள்ளுறுப்பு | பஞ்சபூதம் |
| இருதயம் | நெருப்பு |
| மண்ணீரல் | நிலம் |
| நுரையீரல் | காற்று |
| சிறுநீரகங்கள் | நீர் |
| கல்லீரல் | மரம் |
