ரெய்கியில் முழுமையான பயன்களைப் பெற

 

ரெய்கியில் முழுமையான பயன்களைப் பெறுவதற்கு மாணவர்களும் மாஸ்டர்களும் சில பயிற்சிகளை தொடர்ந்து செய்துவர வேண்டும்.

1. தினமும் தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளை செய்துவர வேண்டும்.

2. அடிக்கடி ரெய்கி ஆற்றலைக் கிரகிக்கவும், அனுப்பவும், பயிற்சி செய்ய வேண்டும்.

3. தீய ஆற்றல்களைத் தூய்மை செய்யும் கிளின்சிங் மற்றும் க்ரௌண்டிங் செய்து பழக்க வேண்டும்.

4. தெரிந்த ஆன்மீகப் பயிற்சிகள், தொழுகை, வழிபாடுகள், பிரார்த்தனைகள் போன்றவற்றில் ஈடுபட வேண்டும்.

5. மனதில் தோன்றும் எண்ணங்களை உன்னிப்பாக கவனித்துப் பழக வேண்டும்.

6. இயற்கையோடு இணைந்து உறவாட வேண்டும்.

7. செடி, கொடி, மரம், மலர், இலை, கல், மண், நீர், போன்ற இயற்கை படைப்புகளின் ஆற்றல்களை அளந்து (ஸ்கேன் செய்து) பழக்க வேண்டும்.

8. உடல், மனம், ஆரா, சக்ராக்கள், மற்றும் ஆற்றலில், உண்டாகும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்துவர வேண்டும்.

இவ்வாறான பயிற்சிகளை தொடர்ந்து செய்துவரும் போதுதான் ரெய்கி சித்தியாகும்.

To Top