ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்? மனிதர்கள் ஒரு நாளைக்கு இத்தனை முறை சாப்பிட வேண்டும் என்ற எந்த விதிமுறையும் இயற்கையில் கிடையாது. சுயமாக பசி உண்டானால், பசியின் அளவுக்கு சாப்பிட வேண்டும் என்பதுதான் இயற்கையின் அமைப்பு.
ஒரு நாளைக்கு மூன்று முறை உணவை உட்கொள்ள வேண்டும் என்பது மனிதர்களின் தவறான புரிதலாகும். உடலுக்கு உணவுத் தேவைப்படும் போது சுயமாக பசி உண்டாகும். பசி உண்டாகும் போது சாப்பிட்டால் போதும்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை பசி உண்டானால், இரண்டு முறை சாப்பிடலாம். அதுவே ஒரு நாளைக்கு ஐந்து முறை பசி உண்டானால், ஐந்து முறை சாப்பிடலாம்.
பசி உண்டாகவில்லை என்றால், சாப்பிடத் தேவையில்லை. ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பசி உண்டாகிறது என்றால் ஒரு தடவை சாப்பிட்டால் போதுமானது.
