கல்லூரி வாசலில் நீ - கவிதை


இவ்வுலகில்
இரகசியம் என்றும்
அதிசயம் என்றும் 
வாய்ப்பில்லாதது என்றும்

எதுவுமே கிடையாது
என்பதை – நேற்றுதான்
உணர்ந்தேன்...

அதிசயமும் ஆச்சரியமும்
மகிழ்ச்சியும் மயக்கமும் 
மொத்தமாக நடந்தது
நேற்றுக் காலையில்

கல்லூரி வாசலில்
ஒரு கவிதை நடை 
நீ...
To Top