இயற்கை என்பது என்ன?
இயற்கை என்பது என்ன? இயற்கை என்றால் தாவரங்கள் என்று பலர் எண்ணுகிறார்கள். மாறாக, வானம், சூரியன், நிலா, பூமி, நிலம், காற்று, நீர், நெருப்பு, மண், பாறை, கடல், ஆறு, குளம், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மீன்கள், பூச்சிகள், தாவரங்கள், உட்பட மனிதர்களின் கைகளால் உருவாக்கப்படாமல், இந்த உலகில் இருக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும் இயற்கைதான்.
