எத்தனை மணிக்கு உறங்க வேண்டும்?
இரவில் மட்டுமே உடலும் மனமும் முழு ஓய்வில் இருக்கும். மேலும் உடலில் கலந்திருக்கும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு முழுமையாக வெளியேற்றப்படும், அதனால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்.
இரவில் விரைவாக உறங்கினால் தான் உடலின் கழிவுகள் முழுமையாக வெளியேறி நோய்களும், உடலின் குறைகளும் குணமாகும்; உடலும் இறுதிவரையில் ஆரோக்கியமாக இருக்கும். இறுதிவரையில் எவருடைய உதவியும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.
