சாப்பிட்டதும் தூங்கலாமா?

 

சாப்பிட்டதும் தூங்கலாமா? சாப்பிட்டப் பிறகு சோர்வு உண்டானால் அல்லது தூக்கம் வந்தால் கண்டிப்பாக தூங்கலாம். அதில் எந்த தப்பும் கிடையாது, மாறாக இந்த செயல் உடலுக்கு நன்மையைத் தரக்கூடியது.

சாப்பிட்ட பிறகு உணவை ஜீரணிக்கும் ஆற்றல் உடலுக்கு போதவில்லை என்றால் சோர்வு, அசதி, அல்லது உறக்கம் உண்டாக வாய்ப்பிருக்கிறது. சாப்பிட்ட பிறகு சோர்வோ, அசதியோ இருந்தால் ஓய்வெடுப்பது தான் நல்லது; இது சாப்பிட்ட உணவு ஜீரணமாக உதவியாக இருக்கும்.

ஆனாலும் சாப்பிட்டப் பிறகு அடிக்கடி சோர்வு உண்டாகிறது அல்லது வயிறு கனக்கிறது என்றால் வயிறு பலவீனமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதனைச் சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

To Top