பகுத்தறிவு – ஆறாம் அறிவு இரண்டும் ஒன்றா?
பகுத்தறிவு – ஆறாம் அறிவு இரண்டும் ஒன்றா? இல்லை, இவை இரண்டும் உடலின் வெவ்வேறு இயக்கங்கள்.
பகுத்தறிவு என்பது எந்த விஷயத்தையும் ஆராய்ந்துப் பார்த்து, சரி – தப்பு, செய்யலாம் – செய்யக்கூடாது, வேண்டும் – வேண்டாம், என்று முடிவு செய்யும் திறன். இது மூளை, மனப்பதிவுகள், மற்றும் ஐம்பொறிகள் தொடர்புடையது. பகுத்தறிவை பயன்படுத்த புத்திக் கூர்மை வேண்டும்.
ஆறாம் அறிவு என்பது மனிதனின் மனம். அதாவது உணர்வது, சுவைப்பது, நுகர்வது, கேட்பது, மற்றும் பார்ப்பது, போன்ற ஐம்பொறிகளின் அனுபவங்களின் பதிவுகள். ஆறாம் அறிவு அனைவருக்கும் இருக்கும், சிந்தனை செய்யாமலேயே மனதில் இருக்கும் பதிவுகளைக் கொண்டு மனம் முடிவெடுக்கும்.
