இயற்கையைச் சார்ந்து வாழ்வது என்றால் என்ன?
இயற்கையைச் சார்ந்து வாழ்வது என்றால் என்ன? இந்த உலகில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு இயற்கையின் விதிமுறை உள்ளது. எதை எல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்றும்; ஒவ்வொரு விஷயத்தையும் எப்போது எப்படி செய்ய வேண்டும் என்றும், விதிமுறைகள் இயற்கையால் வகுக்கப்பட்டுள்ளன.
இயற்கையின் உள்ள சட்டங்களைப் போன்று மனித உடலுக்கும் இயற்கை சட்டத் திட்டங்களை வகுத்துள்ளது. இவற்றைப் புரிந்து கொண்டு, இயற்கைக்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்பையும் புரிந்துகொண்டு, அவற்றை அனுசரித்து வாழ்வதுதான் இயற்கையை சார்ந்து வாழும் வாழ்க்கை முறை.
