நீயும் நானும் கவிதை

 

தெளிந்த வானம்
சுடும் சூரியன் 
நகரும் மேகம்
குளிர்ந்த காற்று
பச்சை மலைத்தொடர்
எங்கும் மரங்கள்
எங்கும் பசுமை

கண்ணைப் பறிக்கும்
குளிர்ந்த நதி 
வளைவு நெளிவுடன் 
கன்னி நடையில் 
நகர...

அவற்றின் நடுவே
செம்மண் வீடு
அந்த வீட்டு முற்றத்தில் 
நீயும் நானும்
நானும் நீயும் நாமும்…
To Top