அதிகமாக தண்ணீர் அருந்தினால் மலம் கழிக்க எளிதாக இருக்குமா?

 

அதிகமாக தண்ணீர் அருந்தினால் மலம் கழிக்க எளிதாக இருக்குமா? அதிகமாக தண்ணீர் அருந்தினால் மலம் கழிக்க எளிதாக இருக்கும் என்பது தவறான கருத்தாகும்.

காலையில் எளிதாக மலம் கழிக்க வேண்டும் என்றால், முதல் நாள் உட்கொண்ட உணவு முழுமையாக ஜீரணமாகி இருக்க வேண்டும். உடலும் குடலும் கழிவுகளை வெளியேற்றும் தன்மையில் ஆரோக்கியமாக இயங்க வேண்டும்.

மேலும் அதிகமாக தண்ணீர் அருந்தினால், உடலின் உஷ்ணம் குறைந்துவிடும் குளிர்ச்சி அதிகரித்துவிடும். உடலின் குளிர்ச்சி அதிகரித்தால் உள் உறுப்புகளின் இயக்கம் குறையும், மலச்சிக்கல் இன்னும் அதிகரிக்கும்.

காலையில் மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் காலையில் எழுந்தவுடன், உடலின் உஷ்ணத்தை அதிகரிக்க ஒன்று அல்லது இரண்டு குவளை வெந்நீர் அருந்தினால் மலம் கழிக்க சற்று உதவியாக இருக்கும், அதைவிடுத்து அதிகமாக தண்ணீர் அருந்தக்கூடாது.

To Top