சாப்பிட்ட உணவின் வாடை சிறுநீரில் வருவது ஏன்?
சாப்பிட்ட உணவின் வாடை சிறுநீரில் வருவது ஏன்? சில உணவுகளையும், பானங்களையும், பொருட்களையும், மருந்து மாத்திரைகளையும், உட்கொண்ட பிறகு சிறுநீரில் அதன் வாடை இருக்கும். அவ்வாறு இருந்தால் அந்த பொருள் உங்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று பொருளாகும். அவற்றை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.
அவை உடலுக்கு தீங்கானவை, அல்லது அவற்றை ஜீரணிக்க உங்கள் உடலுக்கு சிரமமாக இருக்கிறது என்று அர்த்தம். உடலின் அறிகுறியையும் மீறி தொடர்ந்து அவற்றை சாப்பிட்டு வந்தால் மிகப்பெரிய பக்கவிளைவையோ, பாதிப்பையோ, நோயையோ, உருவாக்கக் கூடும்.
