காதலும் கவிதையும்

 

கவிதைகள் வடிக்கும்
தருணத்தில் எல்லாம்
உன் நினைவுகள்
உதிப்பதில்லை

உன் நினைவுகள்
உதிக்கும் தருணத்தில்
எல்லாம் கவிதைகள்
பிறப்பதில்லை 

உன் நினைவுகள் கலந்து 
தோன்றும் கவிதையில்
உயிரோட்டம் தெரிகிறது 

கவிதையில் கவிதை 
கலந்ததாலோ
முழுமைத் தெரிகிறது

To Top