செஸ்ட்நட் பட் மலர் மருந்து
செஸ்ட்நட் பட் மலர் மருந்து (Chestnut Bud), ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்யும் நபர்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சில முக்கியப் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
செஸ்ட்நட் பட் மலர் மருந்தின் குணாதிசயங்கள்
செஸ்ட்நட் பட் குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள், வேகமான வாழ்க்கை முறையில், கற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து பயணிப்பார்கள். கவனமின்மையால், எதையும் எளிதில் மறந்துவிடுவார்கள், அதனால் சில தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வார்கள்.
மனதில் தெளிவு இல்லாமலும், மறதியாலும், ஒரே விசயத்தை திரும்பத் திரும்ப செய்வார்கள்.
செஸ்ட்நட் பட் மலர் மருந்தின் பயன்கள்
செஸ்ட்நட் பட் மலர் மருந்து ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்யும் நபர்களுக்கு, தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும், எதிர்காலத்தில் அவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. கவனமின்மையால் தவறுகள் செய்யும் நபர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தி, கவனத்தை மேம்படுத்துகிறது.
வேகமான வாழ்க்கை முறையில், கற்றுக் கொள்ளாமல் வாழ்பவர்களுக்கு நிதானமாக சிந்திக்கவும், கற்றுக் கொள்ளவும் உதவுகிறது. நினைவாற்றலை மேம்படுத்தி, தவறுகளை தவிர்க்க உதவுகிறது. மனதில் தெளிவை ஏற்படுத்தி, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.
இந்த மலர் மருந்து, தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேற உதவுகிறது.
