அனைவராலும் அனைத்தையும் செய்துவிட முடியுமா?
அனைவராலும் அனைத்தையும் செய்துவிட முடியுமா? இந்த உலகத்தில் அனைவரும் அனைத்தையும் செய்து விட வேண்டும் என்று நினைப்பது தவறு. அனைவரும் அனைத்து செயல்களையும் செய்ய முடியும் என்று கூறுவதும் வெறும் மூடநம்பிக்கை மட்டுமே.
அனைவராலும் அனைத்தையும் செய்துவிட முடியாது. ஒவ்வொரு தனிநபருக்கும் சில மேன்மைகளும், சிறப்புகளும், தன்மைகளும், இயற்கையால் வழங்கப்பட்டிருக்கும். அவற்றை புரிந்து கொண்டு தனக்கு வழங்கப்பட்ட தனித்தன்மையுடன் வாழ்வதே மனிதர்களின் சிறப்பாகும்.